ரயில் பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம்

ரயில் பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம்
ரயில் பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம்

ரயில் பயணிகள் வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்திய ரயில்வே தனது கேட்டரிங் சேவை மற்றும் விருந்தோம்பலை இந்தியா முழுவதும் மேம்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் இ- கேட்டரிங் சேவையும் ஒன்று.

இதற்காக ஐஆர்சிடிசியின் Zoop உணவு டெலிவரி சேவையானது Jio Hapik நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இனி பயணிகள் தங்கள் PNR எண்ணை வைத்து வாட்ஸ்அப் மூலம் தங்கள் உணவை ஆர்டர் செய்தால் இருக்கைக்கே வந்துவிடும். இதற்காக +91 7042062070 என்ற எண்ணில் Whatsapp Chatbot சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உணவு ஆர்டர் செய்ததிலிருந்து நமது இருக்கைக்கு வரும்வரை ட்ராக் செய்துகொள்ளலாம், மேலும் மற்ற ஆன்லைன் வசதிகளைப்போலவே நமது கருத்துக்களையும் தெரிவிக்கமுடியும்.

மற்ற சில சேவைகளைப்போன்று வாட்ஸ் அப்பிலிருந்து வேறு ஒரு லிங்கிற்கு செல்லவேண்டியதில்லை. ஆர்டர் செய்வதிலிருந்து உணவு கைக்கு கிட்டும்வரை அனைத்திற்கும் வாட்ஸ் அப்பிலேயே தொடர்புகொள்ளலாம். இந்த சேவை வசதியானது தற்போது விஜயவாடா, வடோட்ரா, மோராதாபாத், வாராங்கல், கான்பூர், ஆக்ரா காண்ட், துண்ட்லா ஜங்க்‌ஷன், புல்ஹார்ஷா ஜங்க்‌ஷன் மற்றும் இதுபோன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கிடைக்கும். சைவம், அசைவம் மற்றும் சிக்கன் பிரியாணி மற்றும் ஜெய்ன் ஸ்பெஷல் தாலி போன்றவற்றை பிடித்த ரெஸ்டாரண்டுகளில் இருந்து PNR எண்ணை வைத்து ஆர்டர் செய்துகொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com