''குடியுரிமைச் சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்திற்கு உரிமை இருக்கிறது'' ஜெய்சங்கர் கேள்வி

''குடியுரிமைச் சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்திற்கு உரிமை இருக்கிறது'' ஜெய்சங்கர் கேள்வி
''குடியுரிமைச் சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்திற்கு உரிமை இருக்கிறது'' ஜெய்சங்கர் கேள்வி

உலகில் உள்ள அனைத்து மக்களையும் வரவேற்று குடியுரிமை வழங்கும் ஒரேயொரு நாட்டையாவது தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களால் காட்ட முடியுமா என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வினவியுள்ளார்.

டெல்லியில் நடந்த சர்வதேச வர்த்தக கருத்தரங்கில் அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது குடியுரிமை சட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தேசிய குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்ததே நாட்டில் இருக்கும் அகதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக தான் எனக் கூறிய ஜெய்சங்கர், இந்த சட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்தார்.

குடியுரிமை தொடர்பாக உலகில் உள்ள அனைத்து நாடுகளும் நாடாளுமன்றத்தின் மூலம் சட்டம் இயற்றுகின்றன. அவ்வாறு இருக்கும்போது, குடியுரிமை தொடர்பான சட்டம் இயற்றுவதற்கு நமது நாடாளுமன்றத்திற்கு உரிமை இல்லை என எப்படி கூற முடியும் என்றும் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்‌றது.

அதன் மறுநாள் அதே இடத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்ப்பட்டது. அந்த மோதல் டெல்லியின் பல இடங்களில் பரவி கலவரமாக வெடித்தது. இதில் 50க்கும் மேற்பட்ட பலியானார்கள். வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் விசாரிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,284 என கூறப்பட்டுள்ளது. மேலும் வன்முறை தொடர்பாக வதந்தி பரப்பியதாக 40 பேர் கைது கைது‌ செய்யப்‌பட்டுள்‌‌ளது குறிப்பிடத்தக்கது‌‌.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com