\
இலங்கையில் மீண்டும் பற்றி எரியும் எண்ணெய்க் கப்பல்

இலங்கையில் மீண்டும் பற்றி எரியும் எண்ணெய்க் கப்பல்

இலங்கையில் மீண்டும் பற்றி எரியும் எண்ணெய்க் கப்பல்
Published on

இலங்கையில் எண்ணெய்க் கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குச் சொந்தமான நியூ டைமன் எண்ணெய்க் கப்பலில் கடந்த வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இலங்கை கடற்படை, விமானப்படை, இந்திய கப்பற்படை, கடலோரப் பாதுகாப்புப்படைஎன பல்வேறு தரப்பினரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் கப்பலில் ஆங்காங்கே புகைந்து வந்த நிலையில் மீண்டும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. கப்பல் நிற்கும் அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டியில் பகுதியில் பலத்த காற்று வீசுவதன் காரணமாகவும், கப்பலின் உட்பகுதியில் உஷ்னம் அதிகமாக இருப்பதாலும் மீண்டும் தீப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தீயைக் கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com