நவீன தொழில்நுட்பத்துடன் கரான்ஜ் நீர்மூழ்கிக்கப்பல்
பிரான்ஸ் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்கார்பீன் ரக 3வது நீர்மூழ்கிக் கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரான்ஜ் என்ற அந்த நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் ஒப்படைக்கப்பட்டது. 67.5 மீட்டர் நீளமும் 12.3 மீட்டர் உயரமும் கொண்ட இந்தக் கப்பல், நவீன தொழில்நுட்பங்களுடன் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 நீர் மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஸ்கார்பீன் ரக முதல் கப்பல் ஐஎன்எஸ் க்வாரி, கடந்தாண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. 2வது கப்பலான ஐ.என்.எஸ் கந்தாரி, கடலில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள நீர்மூழ்கிக் கப்பல்களை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கடற்படையில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.