அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய கடற்படை தளபதி

அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய கடற்படை தளபதி

அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய கடற்படை தளபதி
Published on

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் அரசு முறை பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமார் அரசு முறை பயணமாக நேற்றிரவு கொழும்பு சென்றடைந்தார். டிசம்பர் 16 வரை அங்கு தங்கியிருக்கும் அவர், டிசம்பர் 15 ஆம் தேதி திருகோணமலையில் நடைபெற உள்ள கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் (என்எம்ஏ) ஆணையிடும் அணிவகுப்புக்கு முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, அட்மிரல் ஆர்.ஹரிகுமார், இலங்கையின் மூத்த அரசியல் மற்றும் பாதுகாப்பு தலைமைகளை சந்திக்க உள்ளார். இலங்கை பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் அவர் பயணம் செய்யவுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, ஒத்துழைப்பு தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com