\
ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் ஏஜெண்டுகளுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் ஏஜெண்டுகளுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!

ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் ஏஜெண்டுகளுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது!
Published on

ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் ஏஜெண்டுகளுடன் பகிர்ந்த குற்றத்திற்காக இந்திய வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆகாஷ் மஹாரியா. 22 வயதான இளைஞர். இந்திய ராணுவத்தில் ராணுவ வீரராக சிக்கிம் பகுதியில் பணி செய்து வந்தார். இந்நிலையில் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் பெண் ஏஜெண்டுகளுடன் பகிர்ந்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

“பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த உளவு துறையினருடன் அவருக்கு சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. போலியான பெயரில் அந்த நாட்டில் பெண் உளவு துறை அதிகாரிகள் அவருடன் நட்பாக பழகியுள்ளனர். அதையடுத்து ஆகாஷ் யாரிடமும் பகிர கூடாத ராணுவ ரகசியங்களை சமூக வலைத்தள சேட் மூலம் பகிர்ந்துள்ளார். இந்த விவரம் ராஜஸ்தான் பகுதியில் இருக்கும் உளவு துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்த காரணத்தினால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தற்போது அவரிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com