மக்களே உஷார்! சுட்டெரிக்க காத்திருக்கும் சூரியன்... வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை!

ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக அளவு வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வரும் நாட்களில் அத்தியாவசியத் தேவைகளின்றி வெயில் நேரத்தில் வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வுமையம்
வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வுமையம்pt web

ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக அளவு வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வரும் நாட்களில் அத்தியாவசியத் தேவைகளின்றி வெயில் நேரத்தில் வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத், மத்திய மகாராஷ்ட்ரா, வடக்கு கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஒடிசா, வடக்கு சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் மிகக்கடுமையான வெப்ப அலை தாக்கம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில், வழக்கமாக 4 முதல் 8 நாட்களுக்கு வெப்ப அலை வெவ்வேறு பகுதிகளில் நிலவும் சூழலில், இந்த ஆண்டு பத்து முதல் 20 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகடலோர பகுதிகளில் அதிக வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பகல் நேரத்தில் 1 மணி முதல் 4 மணி வரை சூரிய வெப்பம் நேரடியாக படாமல் பார்த்து கொள்ள வேண்டும், உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும், அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் செல்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், குடை, தொப்பி உள்ளிட்டவைகளை அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இதற்கிடையே ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டில் 150 முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கடந்த பத்தாண்டு சராசரியைவிட குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள நீர்த்தேக்கங்களில், பத்தாண்டு சராசரியைவிட 73 சதவிகிதம் நீர் இருப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் கடல் பகுதியில் நிலவும் எல் நினோ நிலை காரணமாக, உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com