\
“தென்மேற்கு பருவமழை: எதிர்பார்த்ததை விட அதிகரிக்க வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம்

“தென்மேற்கு பருவமழை: எதிர்பார்த்ததை விட அதிகரிக்க வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம்

“தென்மேற்கு பருவமழை: எதிர்பார்த்ததை விட அதிகரிக்க வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம்
Published on

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொகபாத்ரா, “நடப்பு பருவமழை காலத்தில் மழை அளவு நீண்ட கால சராசரியில் 103% ஆக இருக்கும். இது எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிகம்.

குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாகவும், வடகிழக்கு பகுதிகளில் குறைவாகவும் இருக்கும்” என்று அவர் தெரிவித்தார். தென்மேற்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி கேரளாவில் தொடங்கியதாக வானிலை மையம் ஏற்கெனவே கூறியிருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com