\
மே 25 முதல் உள்நாட்டு விமானச் சேவை : மத்திய அரசு

மே 25 முதல் உள்நாட்டு விமானச் சேவை : மத்திய அரசு

மே 25 முதல் உள்நாட்டு விமானச் சேவை : மத்திய அரசு
Published on

மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் பேருந்துகள், ரயில்கள் ஆகியவற்றுக்கு படிப்படியாக அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வரும் 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். படிப்படியாக விமானச் சேவை முழு அளவுக்கு விரிவு படுத்தப்படும் எனவும், 25-ம் தேதி விமானச் சேவையைத் தொடங்க தயார் நிலையில் இருக்குமாறும் விமான நிறுவனங்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com