\
வெளிநாட்டுத் தொழிலதிபர்கள், மருத்துவர்கள் இந்தியா வர அனுமதி

வெளிநாட்டுத் தொழிலதிபர்கள், மருத்துவர்கள் இந்தியா வர அனுமதி

வெளிநாட்டுத் தொழிலதிபர்கள், மருத்துவர்கள் இந்தியா வர அனுமதி
Published on

வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா வர மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 5வது கட்ட பொது முடக்கம் தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இதனால் வெளிநாட்டினர் இந்திய வருவதற்கான விசா தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வெளிநாட்டுத் தொழிலதிபர்கள் இந்தியா வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களும் இந்தியா வருவதற்கு விசாவில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் சிறப்பு விமானங்கள் மூலம் தொழிலதிபர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் இந்தியா வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையைக் கடந்தது நிசர்கா புயல் !

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com