ஆகாஷ் ஏவுகணைகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி!

ஆகாஷ் ஏவுகணைகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி!
ஆகாஷ் ஏவுகணைகளை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி!

தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஆகாஷ் ஏவுகணையை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்டமாக நட்பு நாடுகளுக்கு இந்த ஏவுகணையை ஏற்றுமதி செய்யவும் அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரத்யேக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த குழுவிற்கு தலைவராக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துரிதமாக ஏற்றுமதியை மேற்கொள்ளவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதன் உற்பத்திக்கான பணிகள் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தரையிலிருந்து 25 கிலோ மீட்டர்  தூரம் வரை இலக்கை தாக்கும் திறன் கொண்டது ஆகாஷ் ஏவுகணை. முழுவதும் இந்தியாவில் உற்பத்தியான பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 2014 முதல் இந்திய விமான படையினராலும், 2015 முதல் இந்திய ராணுவத்தினராலும் இந்த ஏவுகணை பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச கண்காட்சியில் இந்த ஏவுகணை காட்சிக்கு வைக்கப்பட்டது. அது குறித்த விவரங்களை அறிந்து கொண்ட நட்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப இதை இப்போது ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுவரை பாதுகாப்பு தொடர்பான கருவிகளின் பாகத்தை மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்து வந்தது. ஆகாஷ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளோம் எனவும் அரசு தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com