ஜம்மு காஷ்மீர் பற்றி சீனா- பாகிஸ்தான் கூட்டறிக்கையில் சர்ச்சை கருத்து - இந்தியா கடும் கண்டனம்

ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் எப்போது இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்கமுடியாத பகுதிகள் என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம்.
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால்
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால்முகநூல்

சீனா- பாகிஸ்தான் கூட்டறிக்கையில் ஜம்மு காஷ்மீர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

கடந்த 7ஆம் தேதி சீன தலைநகர் பீஜீங்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரீப் சீன பிரதமர் லீ கியாங்கை சந்தித்து பேசிய பின்னர் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த கூட்டறிக்கையில், ஜம்மு காஷ்மீர் குறித்த குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளத்த அவர், “பாகிஸ்தான் - சீன கூட்டறிக்கையில் ஜம்மு காஷ்மீர் குறித்த தேவையற்ற கருத்துகள் இடம்பெற்றுள்ளது. அவற்றை முழுமையாக நிராகரிக்கிறோம். இது தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு அனைத்து தரப்பினரும் அறிந்ததுதான். ஜம்மு காஷ்மீரும், லடாக்கும் எப்போது இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்கமுடியாத பகுதியாக இருந்திருக்கிறது.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால்
HeadLines|இந்தியா கொண்டுவரப்படும் குவைத் விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் To இத்தாலி சென்றார் பிரதமர்!

ஆகவே, இது தொடர்பாக கருத்து தெரிவிக்க வேறு எந்த நாட்டிற்கும் முகாந்திரம் இல்லை. பாகிஸ்தான் - சீனா கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுளள இருநாடுகள் இடையிலான பொருளாதார பாதையின் பல பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. இவை இந்திய பகுதிகளில் அமைந்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் மற்ற நாடுகளின் நடவடிக்கைகளை உறுதியாக எதிர்ப்போம், நிராகரிப்போம்.” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com