\
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை
Published on

இலங்கையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பை அடுத்து, இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், ஆடம்பர ஹோட்டல்களை குறிவைத்து அடுத்தடுத்து 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த‌னர். இலங்கையை உலுக்கிய இந்த சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், அங்கு குண்டுவெடிப்பு நடத்துவதற்காக பயன்படும் 87 டெட்டனேட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இதையடுத்து, இந்தியாவில் தாக்குதல் ‌நிகழாமல் இருப்பதற்காக, இலங்கையை ஓட்டிய கடலோரப் பகுதிகளில் கடலோர பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய பயங்கரவாதிகள் கடல் வழியாக தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவும், மும்பை தாக்குதல் போல மீண்டும் ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்து விடக் கூடாது என்பதற்காகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையை சுற்றியுள்ள கடல் எல்லையை தீவிரமாக கண்காணிக்க, கப்பல்கள் மூலம் கடலோர பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com