சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு

சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு

சிக்கிம் எல்லை பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.

இந்தியா - சீன எல்லையான லடாக் பகுதியில் ஏற்கெனவே பதற்றம் நிலவி வருகிறது. இருதரப்பு ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சிக்கிம் எல்லை பகுதியில் சீன ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவ முயன்றதாக தெரிகிறது. இதையறிந்த இந்திய ராணுவம் சீன வீரர்களை எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதை சீன ராணுவ வீரர்கள் கேட்காமல் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதாகவும் அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததில் 20 மேற்பட்ட சீன வீரர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

மேலும், அதன் பின்னரே அங்கிருந்து சீன வீரர்கள் திரும்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 4 வீரர்களும் காயம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com