\
 செஸ் சாம்பியனான குகேஷ்
செஸ் சாம்பியனான குகேஷ்முகநூல்

வயநாடு நிலச்சரிவு | பாதிக்கப்பட்டோருக்காக நிதியுதவி அளித்த ஜூனியர் செஸ் சாம்பியன் குகேஷ்!

உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் சாம்பியனான குகேஷ் வயநாடு நிலச்சரிவிற்கு10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
Published on

உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் சாம்பியனான குகேஷ் வயநாடு நிலச்சரிவிற்கு10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் சாம்பியனான குகேஷ் உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் வீரராக அண்மையில் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் பயிலும் தனியார் பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவின்போது 220 ஹெலிகேம் மூலம் குகேஷ்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வான் கண்காட்சி நடைபெற்றது.

 செஸ் சாம்பியனான குகேஷ்
“அமைதியுடன் காத்திருங்கள்.. மீண்டு வருவோம்” ப்ளே ஸ்டோரில் முடக்கப்பட்ட MYV3 ad ஆப்.. வெளியான ஆடியோ

விழாவில் குகேஷை கவுரவிக்கும் வகையில் பென்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. அப்போது வயநாடு நிலச்சரிவுக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்குவதாக குகேஷ் அறிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com