model image
model imagex page

பல மடங்கு உயர்ந்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு.. இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கிடு கிடு!

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 121% அதிகரித்துள்ளது.
Published on

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 121% அதிகரித்துள்ளது. 2015இல் 6.3 டிரில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து நடப்பாண்டில் 14 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் உலகளாவிய பங்குச் சந்தைகளின் மதிப்பும் 73% அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1,757இல் இருந்து 2,682ஆக உயர்ந்துள்ளது.

அந்த வரிசையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமாக பில்லியனர் எண்ணிக்கையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, நடப்பாண்டுக்கான பில்லியனர் அறிக்கையை UBS வெளியிட்டுள்ளது. அதில் 185 பில்லியனர்கள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில், 2023-ஆம் ஆண்டில் 32 புதிய பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 21% அதிகரிப்பு உள்ளது. 2015-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து பில்லியனர்களின் எண்ணிக்கை பல்வேறு நாடுகளிலும் இரட்டிப்பாகியுள்ளது. அதாவது சுமார் 123% அதிகரிப்புடன் பில்லியனர்கள் அதிகரித்து வருவதாக UBS அறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்த மேலும் சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அமெரிக்கா:

அமெரிக்காவில் பில்லியனர் சொத்து மதிப்பு 2020 முதல் 2024 வரை 58.5% அதிகரித்து, 6.1 டிரில்லியன் டாலர்களை எட்டியது. அமெரிக்க பில்லியனர்களின் எண்ணிக்கை 11.2% அதிகரித்து 835 ஆக உயர்ந்துள்ளது.

சீனா:

2015 முதல் 2020 வரையிலான விரைவான வளர்ச்சிக்குப் பிறகு, சீன பில்லியனர் சொத்து மதிப்பு 2020இல் 2.1 டிரில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2024 இல் 1.8 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. 2020ல் 588 ஆக இருந்த சீன கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 501 ஆக குறைந்துள்ளது.

இந்தியா:

இந்திய பில்லியனர்களின் சொத்து மதிப்பு, நடப்பு நிதியாண்டில் மட்டும் 42.1% உயர்ந்து 905.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 40 புதிய பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். கோடீஸ்வரர்களின் சொத்து கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து ரூ.77 லட்சம் கோடி இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் 123% அதிகரித்து 83%இல் இருந்து 185% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் அவர்களது சொத்து மதிப்பு 263% அதிகரித்து ரூ.77 லட்சம் கோடியாக இருந்தது. கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவைவிட அமெரிக்காவும் சீனாவும் மட்டுமே முன்னிலையில் உள்ளன.

ஐரோப்பா:

மேற்கத்திய ஐரோப்பிய பில்லியனர்களின் சொத்து மதிப்பு, 2015இல் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து நடப்பாண்டில் 2.7 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. குறிப்பாகா, சுவிஸ் பில்லியனர்களின் சொத்து மதிப்பு குறிப்பிடத்தக்க வகையில் 23.8% அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா:

UAE கணிசமான பில்லியனர் சொத்து மதிப்பை ஈர்த்துள்ளது. இது 39.5% உயர்ந்து 138.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

model image
உயர்ந்த சொத்துகள்.. ஆசிய பணக்காரர் பட்டியலில் முதல் இடம்! அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிய அதானி!

இரண்டாவது இடத்தில் தொழில்துறை கோடீஸ்வரர்கள்!

இந்தியாவின் பணக்கார வர்க்கத்தின் சொத்து மதிப்பு உயர்வதில் குடும்ப வணிகம் பெரும் பங்கு வகிக்கிறது. 2017ஆம் ஆண்டின் கிரெடிட் சூயிஸ் அறிக்கையின்படி, நாட்டில் உள்ள பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட குடும்பத்திற்குச் சொந்தமான 108 வணிகங்கள் உள்ளன. டிசம்பர் 1, 2015 முதல் நிஃப்டி 500 இன்டெக்ஸ் 249% உயர்ந்துள்ளது, மேலும் பில்லியனர் குடும்பங்களின் எண்ணிக்கையும் அதே அளவு அதிகரித்துள்ளது.

உலகில் பெரும்பாலான பில்லியனர்கள் தொழில்நுட்பத் துறையில் இருந்து உருவாகி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 67 ஆயிரம் கோடியில் இருந்து 203 லட்சம் கோடியாக 3 மடங்கு அதிகரித்துள்ளது. தொழில்துறை கோடீஸ்வரர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். 45 ஆயிரம் கோடியில் இருந்து 110 லட்சம் கோடியாக சொத்துகள் உயர்ந்துள்ளன.

பில்லியனர்கள் தங்கள் முதலீட்டு உத்திகளை மாறிவரும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றனர். அடுத்த 12 மாதங்களில், 43% பேர் ரியல் எஸ்டேட் மீதான வெளிப்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். அதேநேரத்தில், 42% பேர் வளர்ந்த சந்தை பங்குகளில் தங்கள் பங்குகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதேநேரத்தில், 27% பில்லியனர்கள் வேறு வகைகளில் தங்கள் முதலீடுகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டிலிருந்து கோடீஸ்வரர்களிடையே இடமாற்றம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு அவர்களுடைய இடமாற்றம் அதிகரித்துள்ளது. 176 நபர்கள் இடமாற்றத்தை விரும்பியுள்ளனர். அவர்கள் சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அடக்கம். அதேநேரத்தில், புலம்பெயர்ந்த கோடீஸ்வரர்களின் மொத்த சொத்த மதிப்பு அமெரிக்க டாலர் 400 பில்லியனைத் தாண்டியுள்ளது.

model image
பில்லினியர் பட்டியல்|2வது இடத்துக்கு முன்னேறிய மார்க் ஜூக்கர்பர்க்.. அம்பானி, அதானிக்கு எத்தகையஇடம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com