இந்தியா
ராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை
ராணுவ மேஜர் மனைவி கொலை: மற்றொரு மேஜரிடம் விசாரணை
இந்திய ராணுவ மேஜர் ஒருவரின் மனைவி கொல்லப்பட்டது தொடர்பாக மற்றொரு ராணுவ மேஜரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமித் திவேதி என்ற ராணுவ மேஜரின் மனைவியான ஷைல்ஜா திவேதி என்பவர் டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஷைல்ஜாவுடன் கடைசியாக காணப்பட்ட மற்றொரு மேஜர் நிகில் ஹண்டா என்பவரை மீரட்டில் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிஸியோதெரபி சிகிச்சைகாக வீட்டை விட்டுச் சென்ற ஷைல்ஜா பின்னர் சடலமாக மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.