எல்லை மீறிய 138 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொலை
கடந்த ஆண்டு எல்லையில் நடைபெற்ற அத்துமீறல் சம்பவங்களின் போது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாகிஸ்தான் வீரர்கள் 138 பேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் தொடர்ச்சியாக அத்துமீறல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்துவிட்டதாக இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். அதேபோல், இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்துவிட்டதாக பாகிஸ்தான் இராணுவ வீரர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதில், கடந்த ஆண்டு இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 138 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தினர் தரப்பில் 28 பேர் கொல்லப்பட்டனர். 2017-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மொத்தம் 860 அத்துமீறல் சம்பவங்களில் ஈடுபட்டனர். 2016-ம் ஆண்டி 221 அத்துமீறல்கள் நடைபெற்றன.