அருணாச்சலில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தமிழக விமானி உட்பட இருவர் பலி!

அருணாச்சலில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தமிழக விமானி உட்பட இருவர் பலி!

அருணாச்சலில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தமிழக விமானி உட்பட இருவர் பலி!

அருணாச்சல பிரதேசத்தில் பறந்து கொண்டிருந்த போது இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 2 விமானிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பறந்துகொண்டிருந்தது. இந்நிலையில் பொம்திலா என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென்று ஹெலிகாப்டரில் இருந்து வந்த தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் பயணித்ததாக கூறப்படும் நிலையில், காலை 9.15 மணி அளவில் விமானிகளுடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடைசியாக கிடைத்த ஜிபிஎஸ் சிக்னலை வைத்து தேடுதல் பணியில் ராணுவம் ஈடுபட்ட நிலையில், பொம்திலா அருகே இருக்கும் பங்ஜலேப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று மதியம் 12:30 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதாக உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஹெலிகாப்டர் மாயமானதாக தகவல் கிடைத்த உடனேயே தேடுதல் பணியை தொடங்கிய அருணாச்சல பிரதேச போலீசார், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் வானிலை அடர்ந்த பனிமூட்டமாக இருப்பதால் மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த 2 விமானிகளில் ஒருவர் பெயர் ஜெயந்த் என்பதும், அவர் தமிழ்நாடு தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com