\
பாக்.பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்!

பாக்.பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்!

பாக்.பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்!
Published on

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில், போர் நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவத்தினரும் பதிலுக்குத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு அருகே இருக்கும் தங்தார் செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது.

இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை அனுப்பும் முயற்சியாக இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். அப்போது நடந்த சண்டையில், இரண்டு இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
 
இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக பீரங்கிகளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com