“ஃபேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை நீக்குங்கள்”: வீரர்களுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தல்

“ஃபேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை நீக்குங்கள்”: வீரர்களுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தல்
“ஃபேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை நீக்குங்கள்”: வீரர்களுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தல்

இந்திய ராணுவத்தினர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட 89 செயலிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல்கள் கசிவதை தடுக்க ஃபேஸ்புக், டிக்டாக், ட்ரூ காலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசெர், யுசி பிரசெர் மினி, ஷூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், தம்பிர், ரெட்டிட் உள்ளிட்ட 89 செயலிகளை ராணுவ வீரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் டிக்டாக், யுசி பிரவுசெர், ஹலோ சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு அண்மையில் மத்திய அரசு தடை விதித்திருந்தது. பாதுகாப்பு மற்றும் இந்தியர்களின் தகவல்கள் சீனாவிடம் செல்வதை தவிர்க்கவும் இந்த தடை விதிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com