சாலையில் தரையிறங்கிய போர் விமானங்கள்

சாலையில் தரையிறங்கிய போர் விமானங்கள்

சாலையில் தரையிறங்கிய போர் விமானங்கள்
Published on

ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் சாலையில் போர் விமானங்கள் அவசர காலத்தில் தரையிறக்குவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.

ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் இந்திய விமானப்படை விமானங்கள் தரையிறக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதுபோன்ற நிகழ்வு பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் சாலைகளில் ஒத்திகை நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படைக்கு சொந்தமான சுகோய் 30, மிரேஜ் 2000, உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்றன. விமான தளத்திற்கு எதிரிகளால் ஆபத்து ஏற்படும் போது சாலைகளில் தரையிறக்கம் செய்வதற்கு ஏதுவாக இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com