\
2021 டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

2021 டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

2021 டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
Published on: 

இந்தியாவில் 2021 டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரனோ வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரனோவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக ஏற்கனவே காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

இதனிடையே காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, 130 கோடி மக்களில் மூன்று சதவீதத்திற்கும் குறைவானவர்களே தடுப்பூசி இரண்டு டோசும் பெற்றுள்ளனர் என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “இந்தியாவில் 2021 டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். ராகுல்ஜி ... தடுப்பூசி போடுவதில் உங்களுக்கு அக்கறை இருந்தால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு கவனம் செலுத்துங்கள்” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com