இந்தியா
அமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..!
அமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..!
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி நவம்பர் மாதத்தில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்க இருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
டெல்லியில் எரிசக்தி தொடர்பான கூட்டத்தில் பேசிய அவர், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இரண்டு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆர்டர் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஈரான் மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு விலக்கு கிடைக்குமா எனத் தெரியவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டின் நலன் கருதியே முடிவுகளை அரசு எடுக்கும் என்று கூறிய பிரதான், வழக்கமான அளவுக்கு ஈரானிடம் கச்சா எண்ணெய் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.