பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளுக்கு இந்தியா வரவேற்பு !

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளுக்கு இந்தியா வரவேற்பு !
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளுக்கு இந்தியா வரவேற்பு !

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் ஆவதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 25ம் தேதி மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 270 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணத்தால் தேர்தல் ரத்தானது. இப்போது 270 தொகுதிகளுக்கும் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.

இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்–இ–இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி 115 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு (நவாஸ்) 64 இடங்கள் கிடைத்து உள்ளன.

தேர்தல் முடிவுகள்:-

பாகிஸ்தான் தெஹ்ரீக்–இ–இன்சாப்  - 115
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்) - 64
பாகிஸ்தான் மக்கள் கட்சி - 43
முத்தாஹிடா மஜ்லிஸ் இ அமல் - 12 
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) - 4
பலுசிஸ்தான் அவாமி கட்சியும் - 4 
ஜனநாயக கூட்டணி (ஜி.டி.ஏ.) 2 
சுயேச்சைகள் - 12 
சிறிய கட்சிகள் - 14 

இதனையடுத்து, சிறிய கூட்டணி கட்சிகளுடன் இணைந்து புதிய அரசை அமைக்கும் முயற்சியில் இம்ரான் கான் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, ‘இந்தியாவுடன் பாகிஸ்தான் நட்புணர்வோடு இருக்க விரும்புகிறேன். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்’ என்றார். 

வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், ‘அண்டை நாடுகளுடன் அமைதியான வழியில் அணுகும் வளமான, வளர்ச்சிக்கு ஏற்புடைய பாகிஸ்தானை இந்தியா விரும்புகிறது. பொதுத் தேர்தல்கள் மூலம் பாகிஸ்தான் மக்கள் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளனர். பாகிஸ்தானில் புதிதாக உருவாகும் பயங்கரவாதம் இல்லாத, பாதுகாப்பான தெற்கு ஆசியாவை உருவாக்க  உதவும் என்று நம்புகிறோம்’ என்றார். இருப்பினும் இம்ரான்கானின் காஷ்மீர் குறித்த கருத்துக்கு ரவீஸ் குமார் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com