இந்திய ரசிகர்களை சோதித்த நபி - பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

இந்திய ரசிகர்களை சோதித்த நபி - பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

இந்திய ரசிகர்களை சோதித்த நபி - பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி
Published on

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - ஆப்கான் அணிக்கு இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 67 ரன்கள் அடித்தார். கேதர் ஜாதவ் 52 ரன் எடுத்தார். ஆப்கான் வீரர்கள் அபாரமாக பந்துவீசினர். நெய்ப், நபி தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர்.

பின்னர், 225 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆப்கான் விளையாடியது. ஸஸாய் 10 ரன்னில் முகமது சமியிடம் ஸ்டம்பை பறிகொடுத்தார். ஆனால், அதன் பிறகு ஆப்கான் வீரர்கள் நிதானமாக விளையாடினர். நெய்ப் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். சற்று நேரம் தாக்குப்பிடித்த ஷகிடி 21, ரஹ்மத் ஷா 36 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அஸ்கார் ஆப்கன் 8 ரன்னில் சாஹலிடம் போல்ட் ஆனார். 

விக்கெட் வீழ்ந்தாலும் நபி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஜத்ரன் 21, ரஷித் கான் 14 என ஒத்துழைப்பு தந்து ஆட்டமிழந்தனர். போட்டி யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற பரப்பிலே சென்றது. இறுதியில், நபி அடிக்க ஆரம்பிக்கவும் ஆப்கான் பக்கம் ஆட்டம் திரும்பியது. கடைசி மூன்று ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 

இந்திய அணி சார்பில் சாஹல், பாண்ட்யா தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். 48வது ஓவரில் சமி 3 ரன்னும், 49வது ஓவரில் பும்ரா 5 ரன்களும் மட்டுமே கொடுத்தனர். அதனால், கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் பவுண்டரில் அடித்து அரைசதம் எட்டினார் நபி. அதனால், 5 பந்துகளில் 12 ரன் என்ற நிலை ஏற்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பதட்டம் தொற்றிக் கொண்டது. இரண்டாவது நபி அடித்தார். ஒரு ரன் மட்டுமே ஓட முடியும் என்பதால் அவர் ஓடவில்லை. 

ஆனால், சமி வீசிய மூன்றாவது பந்தை தூக்கி நேர் திசையில் அடித்தார் நபி. அது நேராக ஹர்திக் பாண்ட்யாவிடம் சென்று கேட்ச் ஆனது. அப்போது தான் இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். நபி 55 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து இந்திய ரசிகர்களை சற்றே சோதித்துவிட்டார். 

கடைசி மூன்று பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், சமி எவ்வித பதட்டமும் அடையாமல் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் ஸ்டம்புகளை பறக்கவிட்டு இரண்டு விக்கெட் சாய்த்தார். ஹாட்ரிக் விக்கெட் சாய்த்தார் சமி. ஆப்கானிஸ்தான் 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சமி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதுவும் பரபரப்பான அந்த இறுதி ஓவரை அசத்தலாக முடித்தார். அதேபோல், பும்ரா, சாஹல், ஹர்திக் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார். 

இந்திய அணி தனது நான்கவது வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒரு தோல்வியை கூட இதுவரை சந்திக்கவில்லை. ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய ஆறாவது தோல்வியை அடைந்தது. இருப்பினும், இன்றைய போட்டியில் அந்த அணி கடுமையாக போராடியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com