\
இந்தியர்களை அழைத்து வர சீனாவுக்கு செல்கிறது மிகப்பெரிய விமானம்

இந்தியர்களை அழைத்து வர சீனாவுக்கு செல்கிறது மிகப்பெரிய விமானம்

இந்தியர்களை அழைத்து வர சீனாவுக்கு செல்கிறது மிகப்பெரிய விமானம்
Published on

சீனாவின் வுகான் நகரில் இருந்து மேலும் பல இந்தியர்களை அழைத்து வருவதற்காக மிகப்பெரிய விமானத்தை மத்திய அரசு நாளை அனுப்பி வைக்கவுள்ளது.

சீனா செல்ல உள்ள இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானத்தில் மருந்துகளும் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கெனவே மத்திய அரசு அனுப்பி வைத்த இரு விமானங்கள் மூலம் வுகானில் இருந்து 640 இந்தியர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 136 பேர் உயிரிழந்தாகவும், ஆயிரத்து 749 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com