மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா

மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா

மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா
Published on

இன்னும் 8 ஆண்டுகளில் சீனாவைவிட அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்திய மாறும் என்று ஐநாவின் அறிக்கை தெரிவித்துள்ளது. 

ஐநா, 'The World Population Prospects 2019' என்ற உலக மக்கள் தொகை தொடர்பான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் உலகத்திலுள்ள மக்கள் தொகை அளவை அதிகரிப்பது குறித்தும், மக்களின் வாழ்க்கை தரம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, 2050ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9.7 பில்லியனாக இருக்கும் என்றும்  உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா, இன்னும் 8 ஆண்டுகளில் உருவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகளவில் கருவுறுதல் சதவிகிதம் 3.2 %லிருந்து 2.5% ஆக குறைந்துள்ளது. இது 2050ஆம் ஆண்டில் 2.2% ஆக குறையும். இந்தியாவில் தற்போது இதன் சதவிகிதம் 2.2% ஆக உள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2019ஆம் ஆண்டிலிருந்து 2050ஆம் ஆண்டு வரை, உலக மக்கள் தொகை அதிகரிக்க இருக்கும் எண்ணிக்கையில் பாதி, இந்தியா, நைஜிரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோபியா, டான்சானியா, இந்தோனேஷியா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் ஆகும்.


 
உலக மக்கள் தொகை அதிகரிக்கும் நாடுகள் பெரும்பாலும் ஏழ்மையான நாடுகளாகவே உள்ளது என்றும் அந்த அறிக்கைச் சுட்டிகாட்டியுள்ளது. இந்த நாடுகளில் நிலவிவரும் வறுமை, ஊட்டச்சத்தின்மை, நோய்கள் ஆகியவை மக்கள் தொகை உயர்வால் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நாடுகளில் மக்களின் ஆயுள் காலம் உலக ஆயுள் காலத்தைவிட 7.4 ஆண்டுகள் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் இருக்கும் குழந்தை இறப்பு, பிரசவகால இறப்பு, சண்டைகள், ஹெச்ஐவி போன்ற கொடிய நோய்கள் ஆகியவை ஆயுள் காலம் குறைவதற்கு காரணமாக இருக்கும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com