2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் - பிரதமர் மோடி

2036 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
pm modi
pm modipt desk

மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் நடைபெறும் அனைத்து பண்டிகைகளும் விளையாட்டுடன் தொடர்புடையதுதான் என குறிப்பிட்டார். 2036 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடரை நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

india olympic
india olympicpt desk

ஒலிம்பிக் தொடரை இந்தியாவில் நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த பிரதமர் மோடி, இது 140 கோடி இந்தியர்களின் நீண்ட கால கனவு என உருக்கமாக கூறினார். இந்த கனவை நனவாக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவளிக்கும் என தாம் நம்புவதாகவும் தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஜப்பானில் நடைபெற்ற கடந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி உட்பட 7 பதக்கங்களை வென்று 48-வது இடம் பிடித்திருந்தது. அடுத்தாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசிலும், 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் ஒலிம்பிக் தொடர் நடைபெறும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com