\
இரு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்த இந்தியா

இரு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்த இந்தியா

இரு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்த இந்தியா
Published on

தரையிலிருந்து விண்ணிற்கு பறந்து இலக்கை அழிக்கும் ஆகாஷ் ஏவுகணையையும் பீரங்கிகளை தகர்க்கும் ஏவுகணையையும் இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது

ஒடிஷாவில் உள்ள பரிசோதனை தளத்தில் நேற்று மதியம் ஆகாஷ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அதை தயாரித்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஆகாஷ் ஏவுகணையை விட தற்போது உருவாக்கப்பட்டுள்ள அதன் மேம்பட்ட வடிவம் திறன் மிகுந்தது என்றும் இதன் மூலம் இந்திய விமானப்படையின் வலிமை மேலும் கூடும் என்றும் அந்த DRDO தெரிவித்துள்ளது.

இது தவிர உள்நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட இலகு ரக பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இரு ஏவுகணைகளின் வெற்றியை தொடர்ந்து அதை தயாரித்த DRDO மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com