\
தேவையற்ற தொலைபேசி அழைப்புகள்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்

தேவையற்ற தொலைபேசி அழைப்புகள்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்

தேவையற்ற தொலைபேசி அழைப்புகள்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்
Published on

தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் அதிகம் வருவதில் சர்வதேச அளவில் இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது.

இதுதொடர்பாக true caller நிறு‌வனம் வெளியிட்டுள்ள விவரங்களில், தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் அதிகம் வருவதில் 2ஆவது‌ இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5ஆவது இடத்திற்குச் முன்னேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் ஒவ்வொரு செல்போன் பயன்பாட்டாளர்களுக்கும் மாதத்திற்கு செல்போன்கள் மூலம் 26 தேவையற்ற அழைப்புகள் வருவதாக true caller தெரிவித்துள்ளது. 

தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் அதிகம் வருவதில் பிரேசில் மீண்டும் முதலிடத்தில் இருப்பதாகவும், பெரு, இந்தோனேஷியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் 2, 3 மற்றும் 4 ஆவது இடங்களில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com