‘மிஷன் சக்தி’க்கு முன்னாள் சுடப்பட்ட செயற்கைக்கோள் எவை?

‘மிஷன் சக்தி’க்கு முன்னாள் சுடப்பட்ட செயற்கைக்கோள் எவை?

‘மிஷன் சக்தி’க்கு முன்னாள் சுடப்பட்ட செயற்கைக்கோள் எவை?
Published on

விண்ணில் செயற்கைக்கோளை சுட்டுவீழ்த்தும் ‘மிஷன் சக்தி’ என்ற சோதனை முயற்சியை வெற்றிகரமாக இந்தியா இன்று செய்து முடித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். அவர், “இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் இன்று மிகப் பெரிய சாதனையை செய்துள்ளது. பூமியின் வட்டப்பாதையிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் விண்ணில் இயங்கி கொண்டிருக்கும் செயற்கைக்கோளை தாக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதற்காக பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது” எனக் கூறினார்.

இந்நிலையில் இந்தியாவிற்கு முன்பு இத்தகைய சோதனைகள் எந்தந்த நாடுகளில் நடத்தப்பட்டன என்பது குறித்து அறிந்து கொள்வது அவசியம். பிரதமர் மோடியே கூறியதைபோல மூன்று நாடுகள் இதனை சாதித்து காட்டியுள்ளன. அந்த மூன்றுநாடுகள் அமெரிக்கா, சீனா, ரஷ்யா. அந்த வரிசையில் இந்தியா இடம் பிடித்துள்ளது.

முதலில் அமெரிக்கா

1959ஆம் ஆண்டு அமெரிக்கா ‘போல்ட் ஓரியான் (Bold Orion)’ என்ற அணுசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் விண்ணிலுள்ள செயற்கைக்கோளை நெருங்கி சென்றது. அதன்பின்னர் 1985ஆம் ஆண்டு ஏஜிஎம்-135 உதவியுடன் அந்நாட்டின் ‘சோல்விண்டு பி78-1(Solewind)’ செயற்கைக்கோளை சுட்டுவீழ்த்தியது. மேலும் 2008ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் பர்ண்ட் ஃப்ரோஸ்ட் (Operation Burnt Frost)’ மூலம் எஸ்.எம்-3 ஏவுகணையை பயன்படுத்தி செயலிழந்த வேவு பார்க்கும் செயற்கைக்கோளை சுட்டுவீழ்த்தியது.

இரண்டாவது  ரஷ்யா

1970 ஆம் ஆண்டு ரஷ்யா விண்ணில் பிற நாடுகளின் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்துவது தொடர்பான சோதனையை வெற்றிகரமாக நடத்தி இருந்தது. அதன்பின்னர் இந்த ஆண்டு பிஎல்-19 நியுடோல் (PL-19 Nudol) என்ற செயற்கைக்கோள் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

மூன்றாவது சீனா

2007ஆம் ஆண்டு சீனா‘ஃபெங்யூன்1சி’ (Fengyun 1C) என்ற வானிலை ஆராய்ச்சி செயற்கைக் கோளை சுட்டுவீழ்த்தியது. அதனால் விண்வெளியில் அதிகளவில் செயற்கைக்கோள் குப்பைகள் ஏற்பட்டதாக உலக நாடுகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்த நாடுகளின் வரிசையில் இந்தியா தற்போது நான்காவது நாடாக விண்வெளிலுள்ள செயற்கைக்கோள்களை சுட்டு வீழ்த்தும் திறன் பெற்று சாதனை படைத்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com