Maoist
MaoistPTI

மாவோயிஸ்ட்கள் கொல்லப்படுவது கணிசமாக அதிகரிப்பு., தெற்காசிய பயங்கரவாத தரவுதளம் தகவல்.!

இந்தியாவில் மாவோயிஸ்ட் வன்முறைச் சம்பவங்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துள்ளதாக South Asian Terrorism Portal என்ற தரவுதளம் தெரிவிக்கிறது. இது குறித்த தகவல் தொகுப்பை விரிவாகக் காணலாம்.
Published on

தெற்காசிய பயங்கரவாத தரவுதளம் (South Asian Terrorism Portal) என்பது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நிகழும் பயங்கரவாத சம்பவங்கள் குறித்த தரவுகளை சேகரிக்கும் தளம் ஆகும். இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் மாவோயிஸ்ட்களால் நிகழ்த்தப்படும் தாக்குதல்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 2016இல் 263 ஆக இருந்தது. இதில், 122 பேர் பொதுமக்கள், 62 பேர் பாதுகாப்புப் படையினர். 2025இல் மாவோயிஸ்ட்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆகக் குறைந்துள்ளது. இதில், 52 பேர் பொதுமக்கள் 33 பேர் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள்.

மாவோயிஸ்ட்
மாவோயிஸ்ட்x

2017இல் மாவோயிஸ்ட் தாக்குதல்களில் 200 பேர் உயிரிழந்த நிலையில், 2021இல் உயிரிழப்புகள் 124 ஆகக் குறைந்தன. 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் மாவோயிஸ்ட் வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் குறைந்து 107 முதல் 112 என்ற அளவில் இருந்தது. 2024இல் மாவோயிஸ்ட் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை முந்தைய சில ஆண்டுகளை விட சற்று அதிகரித்திருந்தது. 2024இல் 161 பேரும் 2025இல் 137 பேரும் மாவோயிஸ்ட் வன்முறைக்கு பலியாகியுள்ளனர். பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையிலான மோதல் சம்பவங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகரித்ததே இதற்குக் காரணம். maa

Maoist
மாவோயிஸ்ட் முக்கியத் தளபதி ஆந்திராவில் சுட்டுக் கொலை... யார் இந்த மாட்வி ஹிட்மா ?

மறுபுறம் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 2016இல் 250லிருந்து 2025இல் 383ஆக அதிகரித்துள்ளது. 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 130 முதல் 150 என்ற அளவிலேயே நீடித்தது. 2022ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட மாவோயிஸ்கள் எண்ணிக்கை 67 ஆகக் குறைந்தது. 2023இல் 56ஆக மேலும் குறைந்தது. 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் புதிய வீரியம் பெற்றன.

பாதுகாப்பு படையினர்
பாதுகாப்பு படையினர்PTI

2024இல் 296 மாவோயிஸ்ட்களும் 2025இல் 383 மாவோயிஸ்ட்களும் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் உயிரிழந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆறு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. 2026 மார்ச் மாதத்துக்குள் இந்தியாவில் மாவோயிஸத்தை முற்றிலும் ஒழிப்பதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் அந்த இலக்கை நோக்கி மிக வேகமாக நகர்ந்துவருகின்றன.

Maoist
"ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதே ஒரே வழி..” சரணடைந்த மாவோயிஸ்ட் சித்தாந்த தலைவர் பேட்டி.!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com