இந்தியாவில் ஒரே நாளில் 4,187 கொரோனா மரணங்கள் பதிவு

இந்தியாவில் ஒரே நாளில் 4,187 கொரோனா மரணங்கள் பதிவு

இந்தியாவில் ஒரே நாளில் 4,187 கொரோனா மரணங்கள் பதிவு
Published on

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று ஒரே நாளில் 4,187 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ந்து மூன்றாவது நாளாக 4,01,078 நபர்களுக்கு புதிதாக கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நேரத்தில், நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளிவந்த மத்திய அரசின் தகவலில் கூறப்பட்டிருக்கும் பிற தகவல்கள் :

* கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 187 பேர் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 34 ஆயிரத்து 83 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 01 ஆயிரத்து 078 பேருக்கு தொற்று புதிதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 18 லட்சத்து 92 ஆயிரத்து 676 என உயர்ந்துள்ளது.

* பாதிக்கப்பட்டவர்களில், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியே 79 லட்சத்து 30 ஆயிரத்து 960 என் உயர்ந்திருக்கிறது.

* தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்து 23 ஆயிரத்து 446 என்று இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com