\
india sailor arresed at secrat inputs relesed for pakistan spy
model imagegoogle gemeni

கடற்படை ரகசியங்கள்.. பாக். பெண் உளவாளியிடம் பகிர்ந்த இந்திய கேப்டன்!

விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தின் அதிமுக்கிய பாதுகாப்பு விபரங்கள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகள் மற்றும் உத்திசார் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
Published on: 

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமி பிரதீப் முகர்ஜி, பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் பாதுகாப்பு ரகசியங்களைப் பகிர்ந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் கைது செய்யப்பட்டுள்ள இவர், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, மேல்விசாரணைக்காக விஜயவாடா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்தியக் கடற்படையின் உளவுப்பிரிவு (Naval Intelligence), மத்திய உளவுத்துறை (IB) மற்றும் மாநில பயங்கரவாத தடுப்புப் படைகள் (ATS) இணைந்து சந்தேகத்திற்குரிய இணையப் பயன்பாடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணித்து வருகின்றன. பாகிஸ்தான் பெண் உளவுத்துறை அதிகாரிகள், சமூக வலைத்தளங்களில் இந்தியப் பெண்களைப்போல போலி கணக்குகளை உருவாக்கி, இந்தியக் கடற்படை அல்லது ராணுவ வீரர்களிடம் ஆன்லைனில் நட்பாகப் பேசி, பின்னர் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதில் வீரர்களின் கவனம் திசைதிரும்பியதும், அவர்களிடம் இருந்து ரகசியத் தகவல்களைப் பெற்றுவிடுகின்றனர். வழக்கமாக, இத்தகைய தொடர்பின்போது பல்வேறு முக்கியத் தகவல்கள் கசியவிடப்படுகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமி பிரதீப் முகர்ஜி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் கிழக்குக் கடற்படையில் பணியாற்றி வந்தார். இவர், விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தின் அதிமுக்கிய பாதுகாப்பு விபரங்கள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகள் மற்றும் உத்திசார் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இவரது இணையவழி நடவடிக்கைகளைக் கண்காணித்து உளவுச் செயலை உறுதி செய்துள்ளது. சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பெண்களின் போலி கணக்குகளைப் பயன்படுத்தித் தொடர்புகொண்ட பாகிஸ்தான் பெண் உளவுத்துறை அதிகாரியின் 'ஹனிட்ராப்' வலையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் பாதுகாப்பு ரகசியங்களைப் பகிர்ந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் கைது செய்யப்பட்டுள்ள இவர், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, மேல்விசாரணைக்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சிறப்புப் புலனாய்வுத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதேநேரத்தில், இந்த வலையமைப்பில் மேலும் பிற வீரர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com