புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்புpt desk

“இந்திய அளவில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரிப்பு” – மத்திய இணையமைச்சர் தகவல்

இந்திய அளவில் புலிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் தெரிவித்துள்ளார்.
Published on

அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு 2022 மதிப்பீட்டின்படி, நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி, 2014-ல் 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018-ல் 2,967 ஆகவும் இருந்தது. பின்னர் புலிகள் எண்ணிக்கை 3,682 ஆக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற வீதத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்புpt desk

இந்த கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு 76 புலிகளும், 2010-ல் 163, 2014-ல் 229, 2018-ல் 264, 2022-ல் 306 ஆக புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேட்டையாடுதல், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழ்நாட்டில், 2021 முதல் 2024 வரையிலான காலத்தில் 5 புலிகள் இறந்துள்ளதாக மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
“டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் இல்லை” - மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com