பள்ளிகளில் ஆதார் எண் கேட்கக் கூடாது : ஆதார் ஆணையம் எச்சரிக்கை

பள்ளிகளில் ஆதார் எண் கேட்கக் கூடாது : ஆதார் ஆணையம் எச்சரிக்கை

பள்ளிகளில் ஆதார் எண் கேட்கக் கூடாது : ஆதார் ஆணையம் எச்சரிக்கை
Published on

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது ஆதார் எண்ணை கேட்க கூடாது என இந்திய பிரத்யேக அடையாள எண் (ஆதார்) ஆணையம் எச்சரித்துள்ளது.

ஆதார் அடையாள எண் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்ககோரியும், நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்கும் சட்டத்தை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளில் "ஆதார் செல்லும்" என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. மேலும் ஆதார் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வரவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறியுள்ளது. அதாவது அரசு மானியம், பான் எண்ணோடு ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட ஒரு சில அம்சங்களுக்கு தவிர மற்றவைக்கு ஆதார் எண் அவசியம் இல்லை என்று கூறியது. அதில் கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால் அதில் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்றும் சிபிஎஸ்இ, நீட் போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும் ஆதார் கட்டாய தேவை கிடையாது என்றும் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தது.


 
இந்நிலையில் டெல்லியில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் சில பள்ளிகள் ஆதாரை கட்டாயப்படுத்தி கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மாணவர் சேர்க்கையின்போது ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தி கேட்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என இந்திய பிரத்யேக அடையாள எண் (ஆதார்) ஆணையம் தனது எச்சரிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் அளித்த தீர்ப்பின் படி வருமான வரிக் கணக்கு தாக்கல், பான் எண் பெறுவது, அரசு மானியங்கள் உள்ளிட்ட ஒரு சில அம்சங்கள் தவிர மற்றவற்றுக்கு ஆதார் கட்டாயம் இல்லை என அதில் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com