“பொருளாதார வளர்ச்சி 2.5% மிகைப்படுத்தப்பட்டுள்ளது” - முன்னாள் சிஇஏ

“பொருளாதார வளர்ச்சி 2.5% மிகைப்படுத்தப்பட்டுள்ளது” - முன்னாள் சிஇஏ
“பொருளாதார வளர்ச்சி 2.5% மிகைப்படுத்தப்பட்டுள்ளது” - முன்னாள் சிஇஏ

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் மதிப்பிடு 2.5% மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளதாக இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 

இந்திய அரசு பொருளாதார வளர்ச்சியை கணக்கிட புதிய முறையை கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தியது. அதன்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் கணக்கிடப்பட்டது. இதன் தரவுகளும் வெளிவந்தது. அதில் 2011-12 முதல் 2016-17 வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7% இருந்தது எனக் கூறப்பட்டது. 

இந்நிலையில் இந்த மதிப்பீடு மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளதாக முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு ஆய்வு ஏட்டை தயாரித்துள்ளார். அதில், “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட செய்யப்படும் புதிய முறை பொருளாதார வளர்ச்சியை மிகைப்படுத்தி காட்டுகிறது. 2011-12 முதல் 2016-17ஆம் ஆண்டு வரை இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 7 சதவிகிதமாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவிகிதமாக இருந்தது. 

இதற்கு காரணம் பொருளாதார வளர்ச்சியை புதிய முறையில் உற்பத்தியின் வளர்ச்சியை கணக்கிடுவதில் சிரமம் இருந்ததால் தான் அது பொருளாதார வளர்ச்சியை மிகைப்படுத்தி காட்டியுள்ளது. அத்துடன் இந்திய பொருளாதார வளர்ச்சி திடமானதாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த ஆராய்ச்சி ஏட்டில் அரவிந்த் சுப்ரமணியன் வளர்ச்சி தொடர்பான 17 காரணிகளை 2001-02 முதல் 2017-18 வரை ஆராய்ந்துள்ளார். அத்துடன் இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகளின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டு காட்டியுள்ளார்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com