உலக பாரம்பரிய நகரமானது அகமதாபாத்: யுனெஸ்கோ

உலக பாரம்பரிய நகரமானது அகமதாபாத்: யுனெஸ்கோ

உலக பாரம்பரிய நகரமானது அகமதாபாத்: யுனெஸ்கோ
Published on

இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தை உலகப் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.


யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டி போலந்தில் நேற்று கூடியது. இதில் அகமதாபாத்தை உலகப் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னால் அகமது ஷாவால் கோட்டை நகரமாக அமைக்கப்பட்டது. மகாத்மா காந்தி இங்கு 1915 முதல் 1930 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தார். முதன் முறையாக 1984 ஆம் ஆண்டில் பாரம்பரிய கட்டடங்களை பாதுகாக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அகமதாபாத் மாநகராட்சி பாரம்பரிய பிரிவு ஒன்றையும் உருவாக்கியது. இந்நகரம் 2011 -ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியில் வெளியிடப்பட்ட யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய நகரமாகக் கூடிய பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று உலகப் பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com