இந்தியா
இந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரயில்: இன்று சோதனை ஓட்டம்!
இந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ரயில்: இன்று சோதனை ஓட்டம்!
இந்தியாவின் முதல் என்ஜின் இல்லாத ‘ரயில் 18’ -ன் சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது
சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் ‘ரயில் 18’ என்ற அதிவிரைவு ரயில்,100 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த ரயிலுக்கு என்ஜின் தனியாக இருக்காது.
பெட்டிகளுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். 16 பெட்டிகள் கொண்ட இந்த குளிர்சாதன ரயிலில் 1,128 இருக்கைகள் உள்ளன. வைஃபை, ஜிபிஎஸ் வசதிகள், நவீன கழிப்பறை, நவீன உணவு தயாரிப்புக் கூடம் மற்றும் விநியோகிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதன் சோதனை ஓட்டம் உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி - மொரதாபாத் இடையே இன்று நடக்கிறது. அதற்குபிறகு இந்த ரயிலை முதல் கட்டமாக வடமாநிலத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.