'இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவத் தயார்' -  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

'இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவத் தயார்' - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

'இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவத் தயார்' - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையின் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்தும் வகையில், இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கவும் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கவும் இந்தியா தயார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசுமுறை பயணமாக இலங்கைக்கு நேற்று சென்றுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் 4 பேரும் அவருடன் சென்றுள்ளனர்.

இந்தியாவிற்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் சென்ற இந்த குழுவினரை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் குழு விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னதாக 2021 ஜனவரியிலும் 2022 மார்ச் மாதத்திலும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் இலங்கைக்கான தற்போதைய பயணத்தின் போது, அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும், பிரதமர் தினேஷ் குணவர்தனவையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளையில், இலங்கையின் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்தும் வகையில், இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்தார். உள்கட்டமைப்பு, இணைப்பு, எரிசக்தி, தொழில் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் இந்தியா-இலங்கை ஒத்துழைப்பு குறித்து வெளியுறவு அமைச்சர்கள் அலி சப்ரி மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் விவாதித்தனர். மேலும், இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என ஜெய்சங்கர் அந்நாட்டு அமைச்சரிடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com