இந்தியா பாகிஸ்தான் போர்
இந்தியா பாகிஸ்தான் போர்pt web

பல மாநிலங்களில் உச்சக்கட்ட உஷார் நிலை.. அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி..

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
Published on

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. எல்லைப் பகுதிகளில் 24 இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் ட்ரோன் பாகங்கள் மற்றும் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் ஜம்முவில் வீடுகள் மற்றும் வாகனங்கள் குமையாக சேதமடைந்துள்ளது.

பாகிஸ்தான்  - இந்தியா
பாகிஸ்தான் - இந்தியாமுகநூல்

“மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் திட்டங்களை ஏற்க முடியாது. பாகிஸ்தான் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்” என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரைத் தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உச்சக்கட்ட உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி, குஜராத், ஜார்கண்ட் மாநிலங்களில் அரசு ஊழியர்கள் மருத்துவர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com