இந்தியா
இந்தியா: நேற்றைய பாதிப்பை விட சற்று குறைவு; புதிதாக 51,667 பேருக்கு கொரோனா உறுதி
இந்தியா: நேற்றைய பாதிப்பை விட சற்று குறைவு; புதிதாக 51,667 பேருக்கு கொரோனா உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியான தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றை பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,01,34,445 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 1,329 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,93,310 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 64,527 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,91,28,267 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 96.56 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடன் தற்போது 6,12,868 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரையில் 30 கோடியே 79 லட்சத்து 48 ஆயிரத்து 774 டோஸ்கள் போடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.