இந்தியாவில் சற்றே குறைந்த கொரோனா ஒருநாள் பாதிப்பு
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவாக உள்ளது. அதன்படி, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 03 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,22,96,414 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,092 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,42,362 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,86,444 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,83,17,404 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,36,648 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 16 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரத்து 663 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.