இந்தியாவில் கொரோனா பாதிப்பு மேலும் குறைந்தது: புதிதாக 1,14,460 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,14,460 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் இருமடங்காக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 89 ஆயிரத்து 232 பேர் குணமடைந்துள்ளனர். 2,677 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 88 லட்சத்து 9 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது. 2 கோடியே 69 லட்சத்து 84 ஆயிரத்து 781 பேர் குணமடைந்துள்ளனர். 3 லட்சத்து 46 ஆயிரத்து 759 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 14 லட்சத்து 77 ஆயிரத்து 799 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று வரையில் 23 கோடியே 13 லட்சத்து 22 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.