இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் உள்ளிட்ட விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,65,704 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 1,23,36,036 நபர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,027 நபர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,72,085 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 11,11,79,578 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com