இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமரசம் செய்ய விரும்புவதாக, சீனா தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பிரச்சனையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த ஆக்கபூர்வமான உதவிகளை செய்வதாக சீனா தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, காஷ்மீர் விவகாரத்தில் தேவையெனில் நாங்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம், ஆனால் முன்றாவது நாட்டின் மத்தியஸ்தை ஏற்க முடியாது என்றும், அது இருநாடுகள் இடையிலான பிரச்சினை மட்டுமே என கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.