\
தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை எவ்வளவு?

தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை எவ்வளவு?

தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு- பலி எண்ணிக்கை எவ்வளவு?
Published on

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 67,084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் 3-வது நாளாக ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக 67,084 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 1,241 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவின் மொத்த பலி எண்ணிக்கை 5,06520 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 1,67,882 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து 4,11,80,751 பேர் மொத்தம் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 7,90,789 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 171,28 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா பரவல் விகிதம் 4.44 சதவீதமாக குறைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com