\
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஒரு நாள் கொரோனா பாதிப்பில் 3 லட்சத்தை கடந்த இந்தியா

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஒரு நாள் கொரோனா பாதிப்பில் 3 லட்சத்தை கடந்த இந்தியா

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஒரு நாள் கொரோனா பாதிப்பில் 3 லட்சத்தை கடந்த இந்தியா
Published on

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நாடாக இந்தியா இருக்கிறது. அமெரிக்காவை ஒப்பிடுகையில் இந்தியாவில் நோய் பரவலின் வேகம் நாம் எண்ணிக்கூட பார்த்திராத அளவில் இருக்கிறது.

உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது அமெரிக்கா. ஆனால் இந்தியாவில் நோய் பரவும் வேகத்தை கணக்கிட்டால் அமெரிக்காவை எல்லாம் முந்திவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி, நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதுவே படிப்படியாக அதிகரித்து கடந்த ஜனவரி 8ஆம் தேதி தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது.

அமெரிக்காவில் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தில் இருந்து 3 லட்சத்தை அடைய 65 நாட்கள் ஆனது. அதுவே இந்தியாவில் ஏப்ரல் 4ஆம் தேதி ஒரு லட்சமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு 17 நாட்களில் 3 லட்சம் என்ற எண்ணிக்கையை தொட்டிருக்கிறது. அமெரிக்காவுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் 4 மடங்கு வேகமாக வைரஸ் பரவுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com