ஆசிரியர்களை மதிப்பதில் இந்தியாவுக்கு 6 வது இடம்: கருத்துக்கணிப்பில் தகவல்

ஆசிரியர்களை மதிப்பதில் இந்தியாவுக்கு 6 வது இடம்: கருத்துக்கணிப்பில் தகவல்

ஆசிரியர்களை மதிப்பதில் இந்தியாவுக்கு 6 வது இடம்: கருத்துக்கணிப்பில் தகவல்
Published on

உலக நாடுகளில் ஆசிரியர்கள் எப்படி மதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் முதல் பத்து நாடுகளில் 6 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்த ஆய்வு 35 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.

பிரிட்டனைச் சேர்ந்த வர்க்கி பவுண்டேசன், ஆசிரியர்களைப் பற்றி இந்த உலகம் என்ன நினைக்கிறது என்ற தலைப்பில் ஆய்வு முடிவுகளை கடந்த வாரம் அறிவித்தது. நாட்டில் ஆசிரியர்களின் நிலை குறித்த மக்களின் மனந்திறந்த கருத்துக்களின் அடிப்படையில், இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது.

சீனா, சிங்கப்பூர், கனடா, மலேசியா, கனடா மற்றும் கானா போன்ற நாடுகளில் நேரடியாக அல்லாமல் மறைமுக முறையில் ஆசிரியர்களின் நிலை குறித்து மக்களிடம் கேட்கப்பட்டது. நம்பகமான, நம்பகத்தன்மையற்ற, பாதிப்பை ஏற்படுத்துபவர், பாதிப்பை ஏற்படுத்தாதவர், புத்திசாலித்தனம் மிக்கவர், புத்திசாலித்தனம் இல்லாதவர் உள்பட பலவகை கேள்விகளின் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

"இந்த ஆய்வின் மூலம் ஆசிரியர்களை மதிப்பது முக்கியமான கடமை மட்டுமல்ல, ஒரு நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது" என்கிறார் ஆய்வை மேற்கொண்ட வர்க்கி பவுண்டேசன் நிறுவனர் சன்னி வர்க்கி.

உலகில் 35 நாடுகளில் தலா ஆயிரம் பேரிடம் ஆசிரியர்கள் பற்றிய கருத்து கேட்கப்பட்டது. இந்த ஆய்வில் ஆசிரியர்களின் நிலை பற்றிய கருத்தில் நாடுகளுக்கு இடையே வேறுபாடு இருந்தது. வளர்ந்த நாடுகளில் ஆசிரியர்களின் நிலை பொதுவாக உயர்ந்து காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com